அரச நிறுவனங்களின் செலவினங்களை மேலும் குறைக்குமாறு பணிப்புரை

அரச நிறுவனங்களின் செலவினங்களை மேலும் குறைக்குமாறு அனைத்து அமைச்சுக்களுக்கும் நிதி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய, புதிய பணியாளர்களை இணைத்துக்கொள்ளவும், புதிய கட்டிடங்கள் கட்டுவதை உடனடியாக நிறுத்தவும், எரிபொருள் மற்றும் தொலைபேசி கட்டணத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் சில அரச நிறுவனங்கள் அரசைச் சார்ந்திருப்பதை நிறுத்த வேண்டும் எனவும் நிதி அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.
அமைச்சின் ஊழியர்கள், அமைச்சின் செயலாளர், மாவட்ட செயலாளர் உட்பட ஏனைய அதிகாரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 5 லீற்றர் எரிபொருள் கொடுப்பனவுகளை குறைப்பதற்கும் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.