80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் : ரவி குமுதேஷ்
இலங்கை எதிர்கொள்ளும் டொலர் நெருக்கடி காரணமாக சுமார் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான (2022) வருடாந்த மருந்து மதிப்பீடுகளுக்கு ஏற்ப மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான கடன் கடிதங்கள் வழங்கப்படாததால் சுமார் 80 வகையான மருந்துகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக திரு.குமுதேஷ் தெரிவித்தார்.
டெண்டர் பணிகள் முடிந்து ஆகஸ்ட் மாதம் கொள்முதல் தொடங்கும் என்பதால், ஜனவரி மாதத்திற்குள் மருந்துகள் நாட்டுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய மருந்துகளை ஆர்டர் செய்யும் பணி ஏற்கனவே நான்கு மாதங்கள் தாமதமாகி உள்ளது.