அகதிகள் முகாமில் பயங்கர தீ! 1,200 குடிசைகள் தீக்கிரை!
பங்களாதேஷின் தென்கிழக்கில், காக்ஸ் பஜார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா அகதிகள் முகாமில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதில் 1,200 குடிசைகள் எரிந்து சாம்பலானதாகவும், இந்த விபத்தில் அதிஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாலை 4:40 மணிக்கு தீ பற்றத் தொடங்கியது என்றும், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக போராடியே தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் என்றும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரோஹிங்கியா அகதிகள் முகாமின் சில பகுதிகள் தீயில் எரிந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.
முஸ்லிம் சிறுபான்மையினரில் பலர் மியான்மாரில் 2017 ஆம் ஆண்டு இராணுவ ஒடுக்குமுறையிலிருந்து தப்பித்துச் சென்று பங்களாதேஷின் எல்லை மாவட்டமான காக்ஸ் பஜாரில் உள்ள முகாம்களில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.