பொரளையில் உள்ள தேவாலயத்தில் கைக்குண்டு; மூவர் கைது!

பொரளையில் உள்ள தேவாலயம் ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தேவாலயத்தின் பணியாளர் ஒருவர் குறித்த கைக்குண்டை அடையாளம் கண்டு வழங்கிய தகவலுக்கு அமைய காவல்துறை இதனை மீட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கு விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.