21 ஆம் திகதி மங்களவுக்கு நாடாளுமன்றில் அனுதாபம்.

இலங்கை அரசியலில் ஆட்சியை உருவாக்கக்கூடிய பெரும் புள்ளியாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.