மலையகத்தில் பொங்கல் விழா; சஜித், பாக்லே சிறப்பு விருந்தினர்கள்!

தொழிலாளர் தேசிய சங்கம் ஏற்பாடு செய்துள்ள தைப்பொங்கல் விழா நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
தைப்பொங்கல் விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இலங்கைக்கான இந்தியத்தூதுவர் கோபால் பாக்லே ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளனர்.