சமையல் எரிவாயு தொடர்பில் வர்த்தமானி வெளியானது.

சமையல் எரிவாயு (LP Gas), கொள்கலன், ரெகுலேட்டர்கள் மற்றும் குழாய் ஆகியவற்றை தரப்படுத்த இலங்கை தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு (SLSI) அதிகாரமளித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானியில் நிதியமைச்சர் கைச்சாத்திட் டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
இலங்கையில் கடந்த ஒரு மாத காலமாக எரிவாயு கொள்கலன்களில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களை அடுத்து நீதிமன்றத்தில் எரிவாயு நிறு வனங்கள் இணங்கிக்கொண்டமைக்கு அமையவே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.