சிவகார்த்திகேயன் நிறைய கடன்கள் வாங்கியிருப்பதாக பேசப்படுகிறதே… அது உண்மையா?
சிவகார்த்திகேயன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- டாக்டர் படத்தை அடுத்து உங்கள் நடிப்பில் தயாராகும் படங்கள் எவை?
பதில்:- டான், அயலான் ஆகிய படங்கள் தயாராகும்.
கேள்வி:- நீங்கள் சொந்த படங்கள் தயாரித்ததில் நிறைய கடன்கள் வாங்கியிருப்பதாக பேசப்படுகிறதே… அது உண்மையா?
பதில்:- அது வெறும் வதந்திதான். அந்த தகவலில் உண்மை இல்லை.
கேள்வி:- சினிமா பற்றிய உங்கள் கனவு நிறைவேறி விட்டதா?
பதில்:- நான் இப்போதுதான் வந்து இருக்கிறேன். இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
கேள்வி:- எந்த டைரக்டரின் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?
பதில்:- ஷங்கர் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
கேள்வி:- எந்த கதாநாயகியுடன் ஜோடி சேர ஆசை?
பதில்:- அப்படி யாரும் இல்லை. கதைக்கு பொருந்துகிற எல்லா கதாநாயகிகளுடனும் நடித்து வருகிறேன். இதையே வருங்காலத்திலும் தொடர்வேன்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.