கொரோனா, ஓமைக்ரான் பரவல்: கவலைக்குரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம்
கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் சூழலில், கவலைக்குரிய நாடுகளின் பட்டியலில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இன்று ஒரேநாளில் 1.94 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவிவரும் சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லவ் அகர்வால் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், WHO இன் படி Omicron டெல்டாவை விட கணிசமான வளர்ச்சி நன்மையைக் கொண்டுள்ளது.தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், கனடா, டென்மார்க் நாடுகளின் தரவுகள்படி டெல்டாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை காட்டிலும் ஒமைக்ரானால் அனுமதிக்கப்படுவது குறைவாகத் தான் உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஜனவரி 12ம் தேதியின்படி 9,55,319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் 159 நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் உள்ள 8 நாடுகளில் கடந்த 2 வாரங்களுடன் ஒப்பிடுகையில் 2 மடங்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம், கேரளா மற்றும் குஜராத் ஆகிய 8 மாநிலங்கள் கவலைக்குரிய மாநிலங்கள் பட்டியலில் உள்ளன. பிரதமருடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு குணமடைந்தோர் வீடுகளுக்கு திரும்பும் கொள்கையில் மாற்றம் செய்துள்ளோம். ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுவோர் 93 சதவீதத்தை அடைந்தவுடன் மூன்று நாள்களுக்கு பிறகு வீட்டிற்கு செல்லலாம் என்று தெரிவித்தார்.