வீடு வீடாக சென்று டெங்கு களப் பரிசோதனை!
தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு டெங்கு நோயின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் முகமாக விசேட வேலைத் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் டெங்கு நோயின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத் திட்டங்கள் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டி.எஸ்.சஞ்ஜீவ் வழிகாட்டலில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கடந்த வருடத்தில் அதிக நோயாளர்கள் இணம் காணப்பட்ட இடங்களான கல்குடா, கண்ணகிபுரம் மற்றும் மீராவோடை போன்ற கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள குடியிருப்பாளர்களின் வீடுகள் அடையாளப்படுத்தப்பட்டு வீடு வீடாக சென்று களப் பரிசோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன்போது சுற்றுச் சூழல் அவதானிக்கப்பட்டு நீர் தேங்கி நிற்கும் தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டு நுளம்பு பரவும் இடங்கள் அழிக்கப்பட்டு விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகிறது.