யாழ்.பல்கலைக் கழக மோதலால் இருவர் வைத்தியசாலையில், ஒருவர் கைது

யாழ்.பல்கலைக்கழகத்தில் இரு குழுக்களுக்கிடையில் இன்று (12) மாலை இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இரு மாணவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவனுக்கும், நான்காம் ஆண்டு மாணவனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு இரு குழுக்களின் சண்டையாக மாறியது.
மோதலில் மூன்றாம் வருட மாணவர்கள் இருவர் காயமடைந்துள்ளதுடன் நான்காம் வருட மாணவர் ஒருவரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே கடந்த ஒரு மாதத்தில் இதுபோன்ற மூன்று மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.