கொண்டகலை மலையிலிருந்து பாரசூட்டில் குதித்த ரஷ்யருக்கு பலத்த அடி

தெல்தோட்டை லுல்கந்துர தேயிலை தோட்டத்தின் கொண்டகலை மலையிலிருந்து பாராசூட்டில் குதித்த ரஷ்ய பிரஜை ஒருவர் பாரசூட் செயல்படாது விழுந்ததில் பலத்த காயங்களுடன் பேராதனை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலை உச்சியில் இருந்து வெளிநாட்டினர் பலர் பாரசூட் டிலிருந்து குதிப்பது பிரபலமான அம்சமாக மாறியுள்ளது, நேற்று மதியம் 3 மணியளவில் ரஷ்ய நபர் பாராசூட்டில் மூலம் குன்றின் மீதிருந்து குதித்த போது பாராசூட் டுடன் விழுந்தவர் , ஒரு மரக்கிளையில் தங்கி மீண்டும் அந்தக் கிளையும் உடைந்து கிளையோடு நிலத்தில் வீழ்ந்துள்ளார்.
சம்பவத்தை கண்ட பிரதேசவாசிகள் கலஹா பொலிஸாரின் 1990 அம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து , அவர் உடனடியாக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தில் அவருக்கு முதுகெலும்பு மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.