பொங்கல் விடுமுறை: போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக்கில் களை கட்டிய மது விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை எதிரொலியாக, காஞ்சிபுரம் டாஸ்மாக் கடைகளில் மதுபான பிரியர்களால் மதுபான விற்பனை களைகட்டிய து.
தமிழகம் முழுவதும் தைப்பொங்கல் திருவிழா கொண்டாடப்படும் நிலையில் வரும் 15-ஆம் தேதி சனிக்கிழமை திருவள்ளுவர் தினத்தை ஒட்டியும்,18-ம் தேதி வள்ளலார் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தைப்பொங்கல் திருவிழாவிற்கு தேவையான புத்தாடைகளையும், காய்கறிகள் பழங்கள், மளிகைப் பொருட்களை வாங்கிட காஞ்சிபுரம் காந்தி சாலை,ரயில்வே சாலை, ராஜாஜி காய்கறிச் சந்தை பகுதிகளில் மக்கள் கடைகளில் குவிந்து வந்தனர்.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்கு பொருட்களை வாங்குவதற்கு குவிந்து வருவதற்கு இணையாக, மதுபான பிரியர்கள் தங்களுக்குத் தேவையான மதுபான வகைகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள காஞ்சிபுரம் டாஸ்மாக் கடைகளில் ஏராளமாக குவிந்து தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி சென்றனர்.
காஞ்சிபுரம் டாஸ்மாக் கடைகளில் முன்கூட்டியே மதுபானங்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள மதுபான பிரியர்கள் குவிந்ததால் ஒரு சில கடைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மதுபான பிரியர்களை ஒழுங்குபடுத்தி டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி செல்ல அனுமதித்தனர்.
இதன் காரணமாக காஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை பல மடங்கு உயர்ந்து வியாபாரம் களை கட்டியது.