‘மொட்டு’ கூட்டு அரசிலிருந்து கௌரவமாக வெளியேறுங்கள் சு.கவுக்கு நாமல் எச்சரிக்கை.
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசு கூட்டு அரசு. இந்த அரசின் கொள்கைகள் பிடிக்கவில்லையெனில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கௌரவமான முறையில் வெளியேறவேண்டும்.”
– இவ்வாறு அமைச்சல் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசில் அங்கம் வகிக்கின்றது. எனவே, அரசால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அக்கட்சியும் பொறுப்புக்கூறவேண்டும். மாறாகத் தமக்குத் தொடர்பில்லை என நழுவிவிட முடியாது.
அதேபோல் அரசின் தீர்மானங்கள் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பிடிக்கவில்லையெனில், அங்கும், இங்குமாக விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டு திரிவதைவிடக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கூறிவிட்டு கௌரவமாக விடைபெறுவதே சிறந்தது” – என்றார்.