கோழிப் பண்ணையாளர்கள் ஊக்குவிப்பு – கைத்தொழில் ரீதியிலான செயலமர்வு.
ஜனாதிபதியின் சுவீட்சத்தின் நோக்கு வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கமைவாக உள்ளூர் கோழிப் பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கோழிப் பண்ணையாளர்களுக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கைத்தொழில் ரீதியிலான செயலமர்வு நேற்றுமுன்தினம் (12) பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தில் நடைபெற்றது.
இதன்போதுகோழிப் பண்ணையாளர்களின் முன்னேற்றத்திற்காக விஞ்ஞான தொழில்நுட்பம் தொடர்பிலான ஆலேசனைகள், வழிகாட்டல்கள், உற்பத்தி தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்கான ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், கோழிப்பண்ணை தொடர்பான விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றன குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இப் பிரதேசத்தில் காணப்படும் உள்ளூர் கைத் தொழிலாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதனூடாக பொருளாதாரத்தை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாகவும், பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.