தொழில் முனைவோர்களுடன் இன்று கலந்துரையாடுகிறார் மோடி
தொழில் முனைவோர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.15) கலந்துரையாடுகிறார்.
காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் கலந்துரையாடும் அவர், வேளாண்மை, சுகாதாரம், நிறுவன நடைமுறைகள் குறித்து விவாதிக்கவுள்ளார்.
இதில், விண்வெளி, தொழில்துறை 4.0, ஃபின்டெக், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டு பிரதமருடன் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.
வேர்களிலிருந்து வளர்ச்சி, டிஎன்ஏ-வை அசைத்தல், உள்ளுரிலிருந்து உலகம் வரை, தொழில்நுட்பத்தின் எதிர்காலம், உற்பத்தித்துறையின் சாம்பியன்களை உருவாக்குதல், நீடித்த வளர்ச்சி என்ற மையப்பொருள்கள் அடிப்படையில் 150க்கும் அதிகமான தொழில்முனைவோர் ஆறு பணிக்குழுக்களாக பிரிக்கப்படுவார்கள்.
இந்தக் கலந்துரையாடலில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையப்பொருள்கள் மீது ஒவ்வொரு குழுவினரும் பிரதமர் முன்னிலையில் விளக்கம் அளிக்கவுள்ளனர்.