மின்கம்பியில் சிக்கி குடும்பப் பெண் பரிதாப மரணம்! – இளைஞர் கைது.

வயல் ஒன்றுக்கு அருகில் மின்கம்பியில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கெப்பட்டிபொல – வெலங்கஸ்தென்ன பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 47 வயதுடைய குடும்பப் பெண் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து, அனுமதியின்றி மின் இணைப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதுடைய இளைஞரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.