நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் உணவுக்காக 9 கோடி ரூபா செலவு.
நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் உணவுக்காக 9 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் இடம்பெறும் பல்வேறு குழுக்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் அரச அதிகாரிகளுக்கும் நாடாளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படுகின்றன.
அதற்கான செலவீனமும் இந்த 9 கோடி ரூபாவுக்குள் உள்ளடங்குகின்றது என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உணவுகள், பானங்கள் விரயமாவதைத் தடுப்பதற்காக நாடாளுமன்றச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைவாக நாடாளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேறும்போது அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
அரிசி, மரக்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதால் நாடாளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.