வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற ஜோதி தரிசனம்
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர் வள்ளற் பெருமான் என்கின்ற இராமலிங்க வள்ளலார். இவர் சென்னை, கருங்குழி, வடலூர், ஆகிய பகுதிகளில் வசித்து வந்தார். 14 ஆண்டுகள் கருங்குழியில் தங்கிய வள்ளலார் திருவருட்பா எழுதினார். இறைவன் ஒளி வடிவானவர் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்தியஞான சபையை வள்ளலார் நிறுவினார்.
ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபையை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார்.
அங்கே, தைப்பூச நட்சத்திரத்தன்று சத்தியஞான சபையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 151 வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. காலை 10 மணிக்கும் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிற. கடலூர் மாவட்டத்திலும் பொதுமக்கள் நலனை கருத்திற் கொண்டு வடலூர் சத்தியஞானசபை . அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் இன்று (18.01.2022) நடைபெற்ற 151வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவின் போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுவதால் பக்கதர்கள் ஜோதி தரிசன நிகழ்ச்சியை வீட்டிலிருந்தே காணுமாறு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.