இருவேறு இடங்களில் மாயமான ஆணும், பெண்ணும் , சடலங்களாக மீட்பு!

கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் இருவேறு பிரதேசங்களில் காணாமல்போன இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக கேகாலை, தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிய மழை பகுதியில் கற்குழியிலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை தெஹியோவிட்ட பொலிஸார் மீட்டுள்ளனர்.
அட்டளுகம வடக்கு பிரதேசத்தைச் சேர்நத 45 வயது நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் காணாமல்போயிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, களுத்துறை, அளுத்கம பிரதேசத்தில் காணாமல்போயிருந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அளுத்கம புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 57 வயது பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
செங்கல் உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாகவே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.