போதைப்பொருட்களுடன் மூவர் வசமாகச் சிக்கினர்.
விசேட சோதனை நடவடிக்கைகளின்போது போதைப்பொருட்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக, அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனாநாயக்க மாவத்தை பிரதேசத்தில், அநுராதபுரம் பிரிவுக்கான குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 6 கிராம் 408 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்தைப் பிரதேசத்தில், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது 6 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒருகொடவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு, பேலியகொடை – நெல்லிகலவத்த பிரதேசத்தில், பேலியகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது 2 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளிய, கிராண்ட்பாஸ் மற்றும் தெமட்டகொடை ஆகிய பிரதேசங்களில் வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபர் திருடினார் எனக் கூறப்படும் தங்க நகை, 4 தொலைபேசிகள் என்பவற்றைக் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.