புதிய ஜனாதிபதி செயலராக காமினி நாளை பதவியேற்பு!

ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் நாளை பதவியேற்கின்றார்.
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர கடந்த வியாழக்கிழமை தனது பதவியை இராஜிநாமா செய்ததையடுத்து அவரால் ஏற்பட்ட வெற்றிடத்தூக்கு காமினி செனரத் நியமிக்கப்பட்டார்.
இதேவேளை, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க எதிர்வரும் 20ஆம் திகதி பிரதமரின் செயலாளராகவும் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.