2வது ஒருநாள் போட்டியில் வெற்றி; இலங்கைக்கு அதிர்ச்சியளித்த சிம்பாவே!
பல்லேகல மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2வது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது சிம்பாப்வே அணி.
சுற்றுலா சிம்பாப்வே அணியுடன்னா 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரின் 2வது போட்டி நேற்று இடம்பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது
.
அவ்வணி சார்பில், கிரேக ;எர்வின் – 91, சிகந்தர் ரஷா 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் ஜெப்ரி வென்டர்சே அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதையடுத்து 303 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 280 ஒட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் தசுன் சானக்க 102 ஒட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் அவரது முதலாவது சதம் இதுவாகும்.
குசல் மெந்திஸ் 57 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.பந்து வீச்சில் டென்டை சடாரா மற்றும் பிளீசிங் முசரபானி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.இதன்மூலம் இலங்கை அணியை 23 ஓட்ஙட்களால் வெற்றி பெற்றது சிம்பாப்வே அணி.
இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 : 1 என சமநிலைப்டுத்தியுள்ளது சிம்பாப்வே அணி.
தொடரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். 3வது போட்டி நாளை மறுதினம் பல்லேகல மைதானத்தில் பகல் – இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.