தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 14வது பொதுப் பட்டமளிப்பு விழா வருகிற பிப்ரவரி மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 10ஆம் தேதி வரை ஒலுவில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற இருக்கிறது.
மொத்தமாக எட்டு பகுதிகளாக நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இவ்விழாவில் மொத்தமாக 2619 பட்டதாரிகள் பட்டங்களைப் பெற உள்ளனர்.
இதில் 2,307 பட்டதாரிகள் உள்வாரியான பட்டங்களை பூர்த்தி செய்வொரும், 312 பட்டதாரிகள் வெளி வாரியான பட்டங்களையும் பூர்த்தி செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.