வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் இடமாற்றம்….

இன்று (20) முதல் அமுலாகும் வகையில் வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் நிர்வாக மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஆர். வரதீஸ்வரன் மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக மாற்றம் பெற்று உள்ளார்.
வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பா. செந்தில் நந்தனன் பேரவைச் செயலக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநரின் செயலாளர் சரஸ்வதி மோகன நாதன் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்.
இதேநேரம் வட மாகாண பேரவைச் செயலகத்தின் செயலாளர் பி. குகநாதன், பிரதி பிரதம செயலாளராக பொது நிர்வாகத்துக்கு மாற்றம் பெற்றுள்ளார். மேலும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இடத்துக்கு எவருமே நியமிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.