அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி வெளியீடு….

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 65 ஆக மாற்றியமைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.