பிலிப்பைன்ஸிற்கு பிரம்மாஸ் ஏற்றுமதி, இந்தியா சீனாவுக்கு எதிராக சாதித்தது என்னென்ன ஒரு பார்வை!
சமீபத்தில் இந்தியா ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மூன்று கப்பல் எதிர்ப்பு பிரம்மாஸ் ஏவுகணை அமைப்புகளை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டதை அனைவரும் அறிவோம்.
இதனால் இந்தியா சில காரியங்களை சாதித்துள்ளது, அதாவது எதிரியுடன் நேரடியாக மோதாமல் மறைமுகமாக சிறிய செயல்களை செய்து தனது எச்சரிக்கையை புரிய வைத்துள்ளது.
சொல்ல போனால் இது மிகவும் சிறிய செயல் ஆனால் நீண்டகால ரீதியில் இதன் விளைவுகள் அதிக பலன் தருபவை மற்றும் ஆழமானவை ஆகும் இதனை தான் GREY ZONE WARFARE என்கிறார்கள்.
ஃபிலிப்பைன்ஸ் ஏற்றுமதி தொடர்ச்சியாக இந்தியாவுக்கான ஏற்றுமதி கதவுகளை உலகளாவிய ரீதியில் திறக்கும் குறிப்பாக தென்கிழக்கு ஆசிய பகுதியில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
காரணம் தென் கிழக்கு ஆசிய முழுவதுமே சீனா பகைத்து கொள்ளாத நாடுகள் என்று ஒன்று கூட இல்லை அந்த வகையில் வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகியவை இந்திய ஆயுதங்களை வாங்கலாம்.
மேலும் இந்த இரண்டு நாடுகளுமே முன்னரே பிரம்மாஸ் ஏவுகணை அமைப்பு மீது நாட்டம் காட்டி வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது ஆகவே சீனாவுக்கு இது நிச்சயமாக ஒரு செக் தான்.