முழங்காவில் நொச்சி முனை பகுதியில் கடலாமையுடன் ஒருவர் கைது.

கிளிநொச்சி முழங்காவில் நொச்சி முனை பகுதியில் கடலாமையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டவருக்கு இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிப்பு.
கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை கடலில் கடலாமையின் ஒருவர் முழங்காவில் பொலிஸார் நேற்று பிற்பகல் கைது செய்த நிலையில் குறித்த சந்தேக நபரையும் கடலாமையும் வனவளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு குறித்த சந்தேக நபரை வனவளத் திணைக்களத்தின்.கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று முற்ப்படுத்தப்பட்டது.
குறித்த சந்தேக நபரை இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கஎதிர்வரும் ஐந்தாம் மாதம் ஐந்தாம் திகதிக்கு வழக்கை நீதவான் ஒத்தி வைத்தார்.
குறித்த ஆமையை மிருக வைத்தியர் பரிசோதனை யை தொடர்ந்து கடலில் விடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த ஆமையை பரிசோதனையின் பின் வட மாகாண மிருக வைத்தியர் மருதங்கேணி தாளையடி கடலில் விடுவிக்கப்பட்டுள்ளது.