புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச ஜனாதிபதி கோட்டாபய தயார்

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்த ஜனாதிபதி, புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு தாரிக் அஹமட் பிரபுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே அமைச்சர் தாரிக் அஹமட் இதனைத் தெரிவித்துள்ளார்.
தெற்காசியா, ஐக்கிய நாடுகள் மற்றும் ஐக்கிய இராச்சியம் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சர் என்ற வகையில், இந்து சமுத்திரப் பகுதி, மத்திய ஆசியா மற்றும் காமன்வெல்த் ஆகிய நாடுகளுடன் இணைந்து செயல்படும் பல பகுதிகள் பிரபு தாரிக் அகமதுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலீடு செய்வதற்கு வசதியளிப்பதன் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் என சுட்டிக்காட்டிய பிரபு தாரிக், ஐக்கிய இராச்சியத்தில் வாழும் பல்லின சமூகங்கள் இலங்கையில் புதிய முதலீடுகளை செய்ய எதிர்பார்ப்போடு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை சுகாதார ஊழியர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றும் ஐக்கிய இராச்சியத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பொருளாதாரத் துறையில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும் அவர் உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலின் போது, இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து, மக்கள் ஒரே சமூகமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹால்டன், முதல் செயலாளர் மேத்யூ டெத், தாரிக் அஹமட் பிரபுவின் உதவியாளர் இசபெல் ஸ்கொட், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2023 இல் ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவை 2023 ஆகும். இதற்காகன விழா ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.