துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் பலி!

மிதிகம பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துர்கி கிராமத்தில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
படுகாயமடைந்த 46 வயதுடைய குடும்பஸ்தர் வலான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும், அவரைக் கைதுசெய்ய விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது எனவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.