வெளிநாட்டவர்களுடன் ரூபாய் பரிவர்த்தனை செய்ய மத்திய வங்கி தடை விதித்துள்ளது

வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான அந்நிய செலாவணியை மாத்திரம் ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி நாட்டிலுள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட பயண முகவர் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் டொலர்களின் புழக்கத்தை அதிகரிப்பதற்கு மத்திய வங்கியின் நாணயச் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடுத்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
‘வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும்’ என்ற தொனிப்பொருளில் சேவைகளை வழங்கும் சுற்றுலா ஹோட்டல்களை எச்சரிக்க சுற்றுலா அமைச்சும் நிதி அமைச்சும் அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளன.
சில ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவளிக்க மறுத்ததே இதற்குக் காரணமாகும்.
உள்ளூர் சுற்றுலாப் பயணிகளை நிராகரித்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் சேவை செய்யும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக அரசு அறிவித்துள்ளது.