கிளிநொச்சி பொது வைத்தியசாலை தீ விபத்து:

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நேற்று (20) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வைத்தியசாலையின் பல சாதனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
நேற்றிரவு மருத்துவமனையின் ஒரு கட்டிடத்தில் முதலில் தீ பரவியது, பின்னர் பல இடங்களுக்கு வேகமாகப் பரவியது. மருத்துவமனை நிர்வாகக் குழுவால் உடனடி யாக தீயணைப்பு துறை மற்றும் இராணுவத்துக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
தீ விபத்தின் போது நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், தீயால் பல மருத்துவமனை சாதனங்களும் மருத்துவ உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளன என்பதுடன் இதுவரை சேத விபரம் தொடர்பில் எந்த மதிப்பீடும் தெரிவிக்கப்படவில்லை.
தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிளிநொச்சிப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.