கொரோனாவால் பாதிக்கப்பட்ட “லதா மங்கேஷ்கர் ICU வில் கவலைக்கிடம்”
“லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம்” வதந்தியை விட்டு பிரார்த்தனை செய்ய உதவியாளர் வேண்டுகோள்..
கொரோனாவால் பாதிக்கப்பட்டு ICU -வில் ஆபத்தான நிலையில் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர்…சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என அவரது உதவியாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன. 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 31ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகத்தில் மின்னல் வேகத்தில் இருந்து வருகிறது. சென்னை, செங்கலபட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொரோனா உறுதியாகிவருகிறது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், பாடகர் சோனு நிகாம் மற்றும் நடிகை த்ரிஷா நடிகர் சத்யராஜ், இயக்குனர் பிரியதர்ஷன், அருண்விஜய், குஷ்பூ என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவர்களில் பலரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
அந்த வகையில் தற்போது இந்தியாவின் நைட்டிங்கேல்’ என அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு கொரோனா மற்றும் நிமோனியா பாதிப்பால் லதா மங்கேஷ்கர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி கோவிட் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் உடல் நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என அவரது உதவியாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. அதோடு விரைவில் லதா மங்கேஷ்கர் நலம் பெற பிரார்த்தனை செய்யும் படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.