ரஞ்சனை சந்திக்க அடிக்கடி சிறைக்குச் செல்லும் , ஜனாதிபதியின் நண்பரான சக்திவாய்ந்த தொழிலதிபர் யார்?
சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்க ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் அடிக்கடி செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வர்த்தகரின் தலையீட்டால் ரஞ்சன் ராமநாயக்கவின் உடற்பயிற்சி பிரச்சினை, உணவுப் பிரச்சினை, மருந்துப் பிரச்சினை என்பன முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு இந்த வர்த்தகர் தயாராகி வருவதாகவும் தெரியவருகிறது.