தலைவரது வங்கிக் கணக்கில் கையாடல் செய்த செயலாளர் வீட்டுக்கு ….

அரசாங்கத்தின் முக்கிய தலைமை பதவியில் உள்ள ஒருவரின் பாராளுமன்ற விவகார செயலாளர் ஒருவர் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே குறித்த நபர் வகித்து வந்த செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த செயலாளர் நீண்டகாலமாக தனது தலைவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடனட்டைகளை பயன்படுத்தி பணம் பெற்ற இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கையும் களவுமாக பிடிபட்டார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான குறித்த செயலாளர், தனது தலைவருடன் அடிக்கடி ஊடகங்களில் தோன்றுவதுடன், ஒரு காலத்தில் தனது தலைவரிடம் ‘முட்டாள் பிசாசு’ (‘මෝඩ යකෙක්’) என்று பகிரங்கமாக திட்டு வாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டார என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.