அரபி கடலில் கவிழ்ந்த பாகிஸ்தானிய படகுகள்; மீனவர்களை தேடும் பணி தீவிரம்.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் அரபி கடலில் அல் சித்திக் மற்றும் அல் பாஹ்ரியா என்ற இரண்டு மீன்பிடி படகுகள் சென்று கொண்டிருந்தன. இவற்றுடன் சேர்த்து 3 படகுகள் கடலில் திடீரென தட்டா கடலோர பகுதியில் மூழ்கி விபத்திற்குள்ளாகின.
இந்த சம்பவத்தில் கடற்பாதுகாப்பு கழகத்தினர் 25 மீனவர்களை மீட்டு கரை சேர்த்துள்ளனர். 8 மீனவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
அந்த பகுதியில் கடுமையான காற்று வீசியது மற்றும் அதிக அளவிலான சுமை ஆகியவற்றால் படகு விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானிய கடற்படையினரும் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.