பூ பறிக்கச் சென்ற மாணவன் குளத்தில் மூழ்கி பரிதாப மரணம்!
புத்தளம், மாதம்பை – தினிப்பிட்டிய குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.
மாதம்பை, பூவக்குளம் பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவன் இன்று காலை தனது சக நண்பர்கள் இருவருடன் குளத்தில் பூ பறிக்கச் சென்ற நிலையிலேயே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவனின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.