கவுதம் கம்பீருக்கு கொரோனா தொற்று உறுதி.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா டெல்லி கிழக்கு தொகுதி எம்.பி.யுமான கவுதம் காம்பீர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-
லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவர் அறிவுறித்தியுள்ளார்.