ரஷ்யா படையெடுத்தால்… பிரித்தானியாவும் களமிறங்கும்!
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால், உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பிரித்தானியா பங்களிக்கும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான எந்தவொரு ரஷ்ய தாக்குதலுக்கும், இதுவரை இல்லாத அளவிற்கு மிக கடுமையாக மேற்கத்திய நட்பு நாடுகள் ஒருங்கிணைந்து பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
உக்ரைனுடனான அதன் எல்லைக்கு 1,00,000க்கும் அதிகமான படைகளை அனுப்பியதற்காக ரஷ்யாவை போரிஸ் ஜான்சன் கண்டித்துள்ளார்.
மேலும் பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகள் சுதந்திர ஐரோப்பாவின் பார்வையை பேரம் பேச முடியாது என்று உறுதியளித்தார்.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால், ஐரோப்பாவில் உள்ள எங்கள் நட்பு நாடுகளைப் பாதுகாக்க ஏதேனும் புதிய நேட்டோ நடவடிக்கைக்கு பிரித்தானியா பங்களிக்க விரும்புகிறோம்.
எஸ்டோனியாவில் நேட்டோ படைகளை பிரித்தானியா எவ்வாறு வழிநடத்துகிறது என்பதையும், நேற்று உக்ரேனிய படைகளையும் கஏவுகணைகளையும் மேலும் பயிற்சி ஆதரவையும் வழங்கியதையும் போரிஸ் குறிப்பிட்டார்.