ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : அரைஇறுதிக்கு கோலின்ஸ் முன்னேற்றம்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த பெண்கள் கால் இறுதி ஆட்டத்தில் டேனிலி கோலின்ஸ் (அமெரிக்கா)- அலிசி கோர்னெட் (பிரான்ஸ்) மோதினார்கள்.
இதில் கோலின்ஸ் 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். கோலின்ஸ்ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 2-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். இதற்கு முன்பு 2019-ல் அரை இறுதி வரை வந்திருந்தார்.