அனைத்து அமைச்சர்களும் உடன் பதவி விலக வேண்டும்! – சஜித் அணி வலியுறுத்து.

“தற்போதைய சூழ்நிலையில் அரச அதிகாரிகள் அல்லர், அமைச்சர்களே பதவி விலக வேண்டும். எனவே, அனைத்து அமைச்சர்களும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“இந்த நாட்டில் எவ்வளவு எரிபொருள் கைவசம் உள்ளது, எப்போது மின்சாரம் துண்டிக்கப்படும் உள்ளிட்ட தகவல்களைத் தொழிற்சங்கப் பிரமுகர்களே நாட்டுக்குத் தெளிவுப்படுத்தி வருகின்றனர். அமைச்சர்கள் மௌனம் காக்கின்றனர். அவர்களுக்கு வெட்கம் இல்லை. எனவே, பதவி விலக வேண்டியது அரச அதிகாரிகள் அல்லர், அமைச்சர்களே என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றோம்” – என்றார்.
அதேவேளை, இந்த அரசுக்கு நாட்டில் என்ன நடக்கின்றது எனத் தெரியவில்லை. மக்களிடம் தியாகம் செய்யுமாறு கோருகின்றனர். நாட்டை நிர்வகிக்க முடியாத அரசு, ஏன் பதவியில் இருக்க வேண்டும் – என்று ஜே.வி.பி. இன்று சுட்டிக்காட்டியுள்ளது.