வெளிநாடுகளிலிருந்து ஶ்ரீலங்காவுக்கு வருவோர் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார விதிகள்!
ஶ்ரீலங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய COVID-19 சுகாதார வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு சிறப்பு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஶ்ரீலங்கா பிரஜைகள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தல் வசதி வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான 1ம் தர ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் புறப்படுவதற்கு முன் பெறப்படும் PCR பரிசோதனைகள் மற்றும் கோவிட்-19 தடுப்பூசி அட்டைகளும் நாட்டிற்குள் நுழைவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டுதல்களின் ஆங்கில தொகுப்பு பின்வருமாறு :-