பழைய சோறு சாப்பிடும் போது வந்த ஒரு இனிப்பான செய்தி! ஏழை குடும்பத்தார் கைக்கு வந்த கோடிக்கணக்கான பணம்

இந்தியாவில் இனிப்பு கடையில் வேலை செய்து வந்த ஏழை நடுத்தர வயது நபருக்கு லொட்டரியில் விழுந்த பெரிய பரிசு அவரின் வாழ்வையே மாற்றியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் மகாசந்தா கிராமத்தை சேர்ந்தவர் துபர் குஷ்மீத். இவர் மண் வீட்டில் வசித்து வந்தார். சிறிய இனிப்பு கடையில் வேலை செய்யும் குஷ்மீத்துக்கு பெற்றோர், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர்.

கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்பட்ட குஷ்மீத் தனக்கு என்றாவது ஒருநாள் அதிர்ஷ்டம் அடிக்காதா என லொட்டரி சீட்டுகளை அவ்வபோது வாங்கி வந்தார்.

அந்த வகையில் நேற்று முன் தினம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது குஷ்மீத் லொட்டரி சீட்டு ஒன்று வாங்கினார். பின்னர் வீட்டுக்கு வந்த அவர் உணவாக பழைய சோறு சாப்பிட்டார்.

அந்த சமயத்தில் அதே கிராமத்தை சேர்ந்த இருவர் குஷ்மீத் வீட்டுக்கு ஓடி வந்து உனக்கு லொட்டரியில் ரூ 2 கோடியே 70 ஆயிரம் ரூபாய் (இலங்கை மதிப்பில்) விழுந்துள்ளதாக கூறினர்.

இதை கேட்டு ஒரு கணம் அதிர்ச்சி அடையந்த குஷ்மீத், சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு வெளியே ஓடினார். பின்னர் தனக்கு லொட்டரியில் பரிசு விழுந்ததை உறுதி செய்து கொண்ட அவர் பணத்தை பெற்றுள்ளார்.

அவர் கூறுகையில், கடவுள் என் வாழ்வில் கண் திறந்துவிட்டார். முதலில் ஒரு நல்ல வீட்டை கட்ட விரும்புகிறேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.