கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீதிமன்றம் கட்டடத் தொகுதி திறந்து வைப்பு.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஐனாதிபதி அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்திற்கமைய சட்டம் மற்றும் சமூக நியாயம் எனும் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீதிமன்றம் கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினதும் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களது பங்கேற்புடன் நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய அலி சப்ரி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் மதகுருமார்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் நீதி அமைச்சின் செயலாளர், மாகாண பிரதம செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள், அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள், இராஜாங்க அமைச்சின் செயலாளர்,உயர் நீதிமன்ற நீதிபதி,மாவட்ட நீதிபதி மற்றும் சட்டத்தரணிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர் .