சுத்தமான சூழல் ஆரோக்கியமா நாளை டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க .கருணாகரன் தலைமையில் ‘’சுத்தமான சூழல் ஆரோக்கியமா நாளை வேலைத்திட்டம் மாவட்ட செயலகத்தில் வெள்ளி கிழமை இன்று (28)இடம்பெற்று வருகின்றது.
சுத்தமான சூழல் ஆரோக்கியமா நாளைஎனும் தலைப்பில் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.செயலாளர் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் வழி காட்டுதலின் கீழ் இவ் நிகழ்வு இடம் பெறுகிறது.
நாடளாவிய ரீதியாக டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து அவற்றை துரிதமாக இல்லாதொழிக்கும் நோக்கில் மாவட்டச் செயலக வளாகத்தினுள் டெங்கு ஒழிப்பு சிரமதான செயற்பாடுகள் நடைபெற்றுவருகிறது . இச் சிரமதான செயற்பாடுகளை தொடர்ச்சியாக நடைமுறை படுத்துவதன் மூலம் இவ் வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்த முடியும்.
மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கிளைகள் வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்களை சிரமதான செயற்பாடுகளை மிகுந்த உற்சாகத்துடன் மேற்கொண்டு வருவதுடன் ”சுத்தமான சூழல் ஆரோக்கியமா நாளை” எனும் நோக்கை அடைவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிவருவது குறிப்பிட தக்கதாகும்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் “சுத்தமான சூழல் ஆரோக்கியமா நாளை” எனும் தொனிப்பொருளில் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இன்று (28)இடம்பெற்றுது.
சுத்தமான சூழல் ஆரோக்கியமா நாளை எனும் தலைப்பில் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளரின் வழி காட்டுதலின் கீழ் இந் நிகழ்வு நாடுபூராகவும் இடம் பெற்று வருகின்றது.
டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து அவற்றை துரிதமாக இல்லாதொழிக்கும் நோக்கில் மாவட்டச் செயலக வளாகத்தினுள் இச்சிரமதான செயற்பாடுகள் நடைபெற்றுவருகிறன. இச்சிரமதான செயற்பாடுகளை தொடர்ச்சியாக நடைமுறை படுத்துவதன் மூலம் டெங்கு நோய்த் தாக்கத்திலிருந்து மக்களைப்பாதுகாக்கமுடிவதுடன், ஆரோக்கியமான சமுதாயத்தினைக் கட்டியெழுப்ப முடியும்.
இச்சிரமதான நிகழ்வின்போது மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கிளைகள் வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்களை சுத்தம் செய்யும் பணியில் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்மையினை அவதானிக்கக் கூடியதாய் இருந்ததுடன் ‘சுத்தமான சூழல் ஆரோக்கியமா நாளை” எனும் நோக்கை அடைவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியமை குறிப்பிடத் தக்கதாகும்.