பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு அபராதம்?
கொரோனா தொற்றுக்கு எதிராக மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத நபர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் சட்டப் பிரிவு ஆராய்ந்து வருவதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை நிலையாக பேணுவதற்கு, பூரண தடுப்பூசி செலுத்துகை இன்றியமையாத காரணியாக அமைந்துள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்றது, எனினும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் மக்கள் ஆர்வமின்றி இருப்பதாக குறிப்பிட்ட அவர், உலகெங்கிலும் உள்ள ஏனைய நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அந்த வகையில், பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத இலங்கையர்களிடம் அபராதம் அறவிடப்படுமாயின், அதனை எந்த நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்பது என்பது குறித்து ஆராயப்படும் என்றும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.