மீன் மற்றும் இறால் உற்பதியில் தன்னிறைவு அடைவதற்கான வேலை திட்டம்..
அரசாங்க அதிபர் க .கருணாகரன் ஏற்பாட்டில் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட செயலத்தில் நேற்று (28) மீன் மற்றும் இறால் உற்பதியில் தன்னிறைவு அடைவதற்கான வேலை திட்டத்திற்கான கூட்டம் இடம்பெற்றது.
இவ் நிகழ்வின்போது கருத்து தெரிவித்த மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆர்வமுள்ள புதிய தொழில் முயற்சியாளார்கள் ஊக்கப்படுத்தி அவர்களின் தொழில் வான்மையை விருத்திசெய்வதற்காக எமது பிரதேச மட்டத்தில் காணப்படுகின்ற வங்கிகளினுடாக கடன் வசதிகள் மற்றும் சலுகையினை பெற்றுகொள்வதற்காகன கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
புதிய தொழில் முற்சியாளர்களிற்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன் வசதியினை பெற்றுக்கொடுப்பதில் முன்னுரிமை தருமாறும் அவ்விடயத்தில் துரிதப்படுத்துமாறும் சி.சந்திரகாந்தன் வங்கிகளின் உயரதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
எமது பிரதேசத்தில் மீன் மற்றும் இறால் உற்பத்தியினை அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு சந்தை வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் உள்ளூர் சந்தைக்கும் விநியோகிக்கலாம்.
இவ்வாறு மீன் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன் எமது நாட்டின் ஜிடிபி ஐ அதிகரிக்கமுடியும் பிரதேச மட்டத்தில் தொழில் வாய்ப்பின்றி இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்கு புதிதாக தொழில் வாய்ப்பை உருவாக்குவதற்கு இது ஒரு சிறந்த வழியாக காணப்படும்.
இதற்க்காக கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 55 உற்பத்தியாளர்களுக்காக 1 1/4 ஏக்கர் வீதம் வழங்கப்படவுள்ளது மற்றும் வாகரை பிரதேசத்தில் 180 ஏக்கர் காணி 12 பேருக்கு வழங்குவதுடன் மீன் வளர்ப்பிற்க்காக 55 பேருக்கு காணி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.