ஜனாதிபதியால் தல்பிட்டிய போதி ரஜமஹா விஹாரையின் போதிகரய திறப்பு…

வாதுவ, தல்பிட்டிய போதி ரஜமஹா விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட போதிகரய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
தல்பிட்டிய போதி ரஜமஹா விஹாரைக்கு நேற்று (28) விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், கோட்டே ஸ்ரீ கலாயாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் மஹாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மற்றும் அனுநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய கொட்டபிட்டியே ராஹுல தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர், விஹாரையின் புதிய பெயர்ப்பலகை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிகரய ஆகியவற்றை, ஜனாதிபதி அவர்கள் திறந்துவைத்தார்.