“நீதிக்கான அணுகல்” நடமாடும் சேவை இன்றும் நாளையும் யாழ்ப்பாணத்தில்…

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை சார்ந்த பல்வேறு அரச திணைக்களங்களில் பொதுமக்கள் சேவை பெறும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்த நடமாடும் சேவை இன்றும் நாளையும் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.