நீதி அமைச்சின் நடமாடும் சேவை ஆரம்பித்து வைப்பு!
நீதிக்கான அணுகல் எனும் தொனிப்பொருளில் வடமாகாணத்தில் நடாத்தப்படும் நீதி அமைச்சின் நடமாடும் சேவை நேற்று(28) முல்லைத்தீவு மாவட்டத்தில் காலை 10.00மணியளவில் மாவட்ட செயலக வளாகத்தில் நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யு.எம். அலி சப்ரி அவர்களால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யு.எம். அலி சப்ரி, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் காதர் மஸ்தான், நீதி அமைச்சின் செயலாளர்மாயாதுன்னை, மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், குறித்த நடமாடும் சேவையில் பங்கெடுக்கும் அலுவலகங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் மாவட்ட செயலக வாயிலிருந்து விழா மண்டபத்திற்கு வன்னியின் பாரம்பரிய குடமூதல் நடனத்துடன் வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நீதி அமைச்சரின் விசேட உரை இடம்பெற்றது.
குறித்த நடமாடும் சேவையின் ஓர் அங்கமான காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு கண்பாணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட நீதி அமைச்சர் அங்கு வருகைதந்திருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சிலரிடம் கலந்துரையாடனார்.